• Jul 24 2025

சூப்பர் ஸ்டார் நடிகரின் டார்ச்சலால் நம்பரை பிளாக் செய்த நடிகை..கடைசியில் நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கால் செய்த சூப்பர் ஸ்டார் நடிகர் டார்ச்சர் தாங்காமல் பிளாக் செய்த பிக்பாஸ் நடிகை

பாலிவுட்  திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் சல்மான் கான், நடிகர் அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வீரம் படத்தின் இந்தி ரீமேக்கான Kisi Ka Bhai Kisi Ki Jaan படத்தில் நடித்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே, தமன்னா ரோலில் இப்படத்தில் நடித்துள்ளார்.

அத்தோடு சல்மான் கானின் தம்பிகளில் ஒருவருக்கு காதலியாக பிக்பாஸ் நடிகை ஷெஹ்னாஸ் கில் நடித்திருக்கிறார். சீரியல் மற்றும் ஒருசில படங்களில் நடித்துள்ள ஷெஹ்னாஸ் கில், சல்மான் கானின் பிடித்தமான பிக்பாஸ் போட்டியாளராக திகழ்ந்து வந்தார்.

அதனால் தான் இந்த பட வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. இவ்வாறுஇருக்கையில்  இப்படத்தின் ப்ரமோசன் நிகழ்ச்சிக்காக தி கபில் சர்மா நிகழ்ச்சியில் சல்மான் கானுடன் கலந்து கொண்டுள்ளார் ஷெஹ்னாஸ் கில். எனினும் அப்போது தனக்கு தெரியாத எண்ணில் இருந்து போன் கால் தொடர்ந்து வந்தது.

அப்படியான போன் கால் வந்தால் உடனே பிளாக் செய்துவிடுவது என் வழக்கம் என்பதால் அதை பிளாக் செய்துவிட்டேன்.

இதன்பின் சல்மான் கான் என்னிடம் பேச கால் செய்து வருவதாக மெசேஜ் வந்ததும், அந்த நம்பரை ட்ரூ காலர் ஆப் மூலம் யார் என்று பார்த்த போது தான் தெரிந்தது அது சல்மான் கான் நம்பர் தான் என்று. உடனே பிளாக்கில் இருந்து எடுத்தப்பின் சல்மான் கான்  என்னிடம் பேசினார்.

அப்படி தான் இப்படத்தின் வாய்ப்பு கிடைத்ததாக நடிகை ஷெஹ்னாஸ் கில் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement