• Jul 26 2025

''கேமரா மேன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி டார்ச்சர் பண்ணாரு'' - வடிவேலு பட நடிகை கூறிய அதிர்ச்சித் தகவல்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சென்னையில் பிறந்து வளர்ந்த, தாரணி, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக, நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சில, படங்களில் துணை நடிகையாக நடித்த நிலையில், ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. படத்தில் கமிட் ஆகும் போது அட்ஜஸ்ட்மென்ட் குறித்து, எதுவும் பேசாத இயக்குநர் படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது தன்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் படி கூறியுள்ளார். தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறிய பின்னர் அவர் தொந்தரவு செய்வதை விட்டுவிட்டாராம்.

ஆனால் கேமரா மேன் பலமுறை, தாரணியிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கூறி வற்புறுத்தியுள்ளார். பின்னர் அவரிடம் தாரணி,  'தயவு செய்து தப்பா எடுத்துக்காதீங்க, நான் எப்படி சினிமாவிற்கு வந்தேன் என்று கேட்டுட்டு வாங்க, தப்பான வழியில் சினிமாவிற்கு வந்திருந்தேன் என உங்களுக்கு தெரிந்தால், நீங்கள் சொல்வதை நான் செய்கிறேன் என கூறியுள்ளார்.

தாரணி இப்படி பேசியதால், அவரை அந்த கேமராமேன் நேரடியாக தொந்தரவு செய்யவில்லை என்றாலும்... அதிகமாக வெட்பம் தரக்கூடிய லைட்டுகளை, அடித்து கொடுமை படுத்தியதாக கூறி ஷாக் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பின்னர், ஹீரோயின் வாய்ப்பே வேண்டாம் என முடிவு செய்து தொடர்ந்து குணச்சித்திர வேடங்களையே தெரிவு செய்து நடிக்க ஆரம்பித்தார்.

மேலும் தாரணி நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த, பட்ஜெட் பதமநாபன் திரைப்படம் தற்போது வரை ரசிகர்களால் ரசிக்க கூடிய படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. சமீப காலமாக, தொடர்ந்து சீரியல்களில் மட்டுமே நடித்து வருகிறார் தாரணி. அந்த வகையில் பொன்மகள் வந்தாள், தலையானைப் பூக்கள், வாணி ராணி, தாலாட்டு உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


Advertisement

Advertisement