• Jul 26 2025

தனிக்குடித்தனம் போன ப்ரியா... வீட்டு ஓணரால் காத்திருந்த அதிர்ச்சி... ஓடி வந்து தூக்கிய ஜீவா... ஈரமான ரோஜாவே ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான் ரோஜாவே சீசன் 2.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.

இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் ப்ரியா தனது மாமனாரிடம் "ஜீவா வரல, நான் தனியாக தனிக்குடித்தனம் போகிறேன்" எனக்கூறிச் செல்கின்றார்.


புது வீட்டிற்கு தனிக்குடித்தனம் போன ப்ரியா அங்கு பால் காய்ச்சுகின்றார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் தீ பிடிக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த வீட்டு ஓணர் தன்னுடைய புது வீட்டை நாசமாக்கி விட்டதாக கூறி ப்ரியாவை வீட்டை விட்டு அனுப்புகின்றார்.

அந்த சமயத்தில் ப்ரியா கால் தடுக்கி கீழே விழுகின்றார். அப்போது அங்கு வந்த ஜீவா ப்ரியாவை தூக்கிச் செல்கின்றார்.  


Advertisement

Advertisement