• Jul 25 2025

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறிய பிரபலம்- அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலகெங்கும் ரசிகர்களை கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.இது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரே நிகழ்ச்சி பிக்பாஸ். 

தற்போது தமிழ், தெலுங்கில் 6வது சீசனும், ஹிந்தியில் 16வது சீசனும் ஒளிபரப்பாகி வருகின்றது.

தமிழில் 21 போட்டியாளர்கள் களமிறங்க இப்போது 10 பேர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார், இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற கேள்வி மக்களிடம் அதிகமாக இருக்க ஏடிகே குறைந்த வாக்குகள் பெற்று இறுதியில் உள்ளார்.

ஆனால் கடைசி நேரத்தில் கூட வெளியேறுபவரின் விவரம் மாறலாம், பொறுத்திருந்து பார்ப்போம்.

அத்தோடு தமிழை போல தெலுங்கிலும் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஒளிபரப்பாகின்றது. முதல் சீசனை ஜுனியர் என்.டி.ஆர், இரண்டாவது சீசன் நானி என தொகுத்து வழங்க பின் அடுத்தடுத்து 3, 4, 5, 6 சீசன்களை நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார்.

எனினும் தற்போது நாகர்ஜுனாவே அடுத்த 7வது சீசனை தான் தொகுத்து வழங்க போவதில்லை என்றும் இந்த சீசனோடு வெளியேறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும்  இது தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக்கிங் செய்தியாக அமைய அடுத்த சீசனிற்கு விஜய் தேவரகொண்டாவை இறக்க முயற்சி செய்துவருகிறார்களாம் பிக்பாஸ் குழு.

Advertisement

Advertisement