• Jul 26 2025

நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள்... ஐயையோ இதில யார் போனாலும் கவலையாய் இருக்குமே.. வெளியானது ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது 60 நாட்களைத் தாண்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பத்தில் இருந்தே சண்டை,அடிதடி தள்ளுமுள்ளு, வாக்குவாதம் என போட்டியாளர்களிடையே சுவாரசியம் குறையாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.

அந்தவகையில் 21 போட்டியாளர்களுடன் ஆடம்பரமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது ஷிவின் கணேசன், அஸீம், மணிகண்டன், ரச்சிதா, ஏடிகே, அமுதவாணன், கதிரவன், தனலட்சுமி, விக்ரமன், மைனா, ஜனனி ஆகியோர் மட்டுமே எஞ்சி உள்ளனர்.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் இந்தவார வெளியேற்றப் பட்டியலுக்கான தேர்வு இடம்பெறுகின்றது. அதில் மைனா, விக்ரமன், அமுதவாணன் ஆகியோர் மணிகண்டனின் பெயரைக் கூறுகின்றனர். 

தனலட்சுமி, மணிகண்டன், ரச்சிதா ஆகியோர் விக்ரமன் பெயரைக் கூறுகின்றனர்.மேலும் adk, அசீம் ஆகியோர் ரச்சிதா பெயரைக் கூறுகின்றனர். மேலும் ஷிவின், கதிரவன், மணிகண்டன், adk ஆகியோர் அசீம் பெயரைக் கூறுகின்றனர். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement