• Jul 25 2025

பிரபலங்களோடு இணைந்து பிறந்தநாளை கொண்டாடிய ஆர்யா... படக்குழுவினர் செய்த நல்ல விஷயம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் ஆர்யா. திரையுலகில் நுழைந்து குறுகிய காலத்திற்குள் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களில் குடி கொண்ட ஒருவராகவும் விளங்கி வருகின்றார். 

அந்தவகையில் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு 'சார்பட்டா' என்ற திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக 'டெடி' படமும் நேரடியாக ஓடிடியில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 


அதுமட்டுமல்லாது 'கேப்டன்' திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து ஆர்யா ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. மேலும் அடுத்ததாக ஆர்யா நடிப்பில் 'தி விலேஜ்' எனும் வெப் சீரிஸ் உருவாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது ஆர்யா நடிக்கும் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஆர்யாவின் 41-ஆவது பிறந்தாள் படப்பிடிப்பு தளத்தில் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. 


அதன்படி கேக் வெட்டி படக்குழுவினருடன் இணைந்து ஆர்யா தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். அதுமட்டுமல்லாமல் படக்குழு சார்பில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.


இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர்களான பிரபு, ஆடுகளம் நரேன், நடிகை சித்தி இத்னானி, இயக்குநர் முத்தையா மற்றும் படப்பிடிப்பு குழுவினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement