• Jul 25 2025

பத்து தல படத்தில் பட்டையை கிளப்பிய நடிகை சாயிஷா...! இவங்க தான் காஸ்டியூமரா.?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது. இப்படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை திரைப்படங்களை இயக்கிய ஒபேலி N கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குநர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சமீபத்தில் ராவடி எனும் பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பிரபல நடிகையும் நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா இந்த பாடலில் நடனம் ஆடி இருப்பார்.

 முன்னதாக சமந்தா நடிப்பில் புஷ்பா திரைப்படத்தில் வெளியான ஓ சொல்றியா மாமா பாடல் வரிசையில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. நடிகை சாயிஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த் மற்றும் டெடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். அண்மையில் இவருக்கும் ஆர்யாவுக்கும் திருமணமாகி குழந்தை பிறந்த நிலையில், திரும்பவும் சாயிஷா திரைத்துறையில் முழு கவனம் செலுத்துகிறார். அதன் முதல் அங்கமாக வெளியாகியுள்ள ராவடி பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், இப்பாடல் குறித்து பேசிய சாயிஷா, “இந்தப் பாடல் ஷூட்டிங்கில் என்னை  வீட்டில் இருப்பவர்கள் போல் பார்த்துக் கொண்டார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் சார் இசையில் பணிபுரிவது ஒரு கனவு. அந்த பக்கெட் லிஸ்ட் இப்போது நிறைவேறியுள்ளது. நடன மாஸ்டர் பிருந்தா மாஸ்டர் என்னை சிறப்பாகப் பார்த்துக் கொண்டார். இப்பாடலை நன்றாக கோரியாகிராஃப் செய்துள்ளார். நடிகர் கௌதம் கார்த்திக்கை இப்படி ஒரு புது கெட்டப்பில் பார்த்தது மகிழ்ச்சி. இயக்குநர் கிருஷ்ணாவுடன் 2 நாள் பணிபுரிந்தது பல மாதங்கள் பணிபுரிந்த உணர்வு. சிம்புவுடன் விரைவில் பணிபுரிவேன்” என குற்ப்பிட்டுள்ளார்.

மேலும் பேசியவர், “என் ஆடை வடிவமைப்பாளர் என் அம்மா தான். என்னுடைய முதுகெலும்பு அவர்.  அனைவருக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் நன நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement