• Jul 23 2025

முதலில் இந்து முறை இரண்டு வருடங்களின் பின்னர் கிறிஸ்தவ முறை- விசித்திரமாக திருமணம் செய்த கிரிக்கெட் வீரர்

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் ஹர்திக் பாண்டியா. இவர் பாலிவுட் நடிகையும், டான்ஸருமான நடாஷா ஸ்டான்கோவிச் என்பவரை காதலித்து வந்தார். இதையடுத்து காதும் காதும் வைத்தது போன்று நடாஷாவை திருமணம் செய்து கொண்டார் பாண்டியா. 


அதாவது கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி துபாயில் யாட்டில் வைத்து நடாஷாவிடம் ப்ரொபோஸ் செய்திருந்தார் பாண்டியா. இதையடுத்து பெற்றோர்களின் சம்மதத்துடன் அவர்களின் திருமணம் வீட்டில் மிகவும் எளிமையாக நடந்தது. இதனைத் தொடர்ந்து 2020ம் ஆண்டு ஜூலை மாதம் மகன் அகஸ்தியாவை பெற்றெடுத்தார் நடாஷா. இதனால் கர்ப்பமான பிறகே நடாஷாவை திருமணம் செய்திருக்கிறார் பாண்டியா என்று அப்பொழுது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.


இந்நிலையில் தற்போது நடாஷாவும், ஹர்திக் பாண்டியாவும் மீண்டும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது ஹர்திக் பாண்டியா, நடாஷா தம்பதியினருக்கு முதல் முறையாக இந்து முறைப்படி தான் திருமணம் நடந்தது. இதன் காரணமாகத் தான் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம் நடந்திருக்கிறது. இந்த திருமணம் அவர்களின் மகன் அகஸ்தியா முன்னிலையில் நடைபெற்றது. 


மேலும் ஹர்திக் பாண்டியா, நடாஷா ஸ்டான்கோவிச்சின் இந்த திருமண நிகழ்வானது உதய்பூரில் கிறிஸ்தவ முறைப்படி பிரமாண்டமாக நடந்தது. அதில் வெள்ளை நிற கவுனில் தேவதை மாதிரி அழகாக இருந்தார் நடாஷா. அதேபோல் கோட், சூட்டில் கம்பீரமாக இருந்தார் பாண்டியா. 


இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் ஜோடியாக கைகோர்த்து வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட ஹர்திக் பாண்டியா, நடாஷா ஸ்டான்கோவிச் தம்பதியினருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement