• Jul 23 2025

யுவனின் இசை நிகழ்ச்சியில் நடந்த விபரீதம்; 10 பவுன்சர்கள் மீது வழக்குப்பதிவு

Prema / 2 years ago

Advertisement

Listen News!

1997ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான 'அரவிந்தன்' என்ற படத்தின் மூலம் தனது 16-ஆவது வயதில் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா சமீபகாலமாக பல இசைக் கச்சேரிகளிலும் கலந்து வருகின்றார். 


அதாவது திருச்சி விமான நிலையத்தை அடுத்து மொராய் சிட்டி பகுதியில் அவ்வபோது திரை பிரபலங்களைக் கொண்டு பாட்டுக் கச்சேரிகள் நடத்தப்படுவது வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் மாலை நேரத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 


இந்த நிகழ்ச்சியை பார்க்க ஏராளமானோர் குவிவதால் அவர்களை கட்டுப்படுத்த பவுன்சர்கள் பயன்படுத்தப்படுவது வழக்கம். எனவே அன்றைய தினம் யுவன்சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியிலும் பவுன்சர்கள் பயன்படுத்தப்பட்டன.

இவ் இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக முகமது ஹரிஷ் என்ற இளைஞர் தனது உறவினர்களுடன் சென்றுள்ளார். அவர் அதே பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் 3-ஆம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வருகிறார். அத்தோடு ஹரிஷின் தாயார் அஜீம் திருச்சி குற்ற காப்பகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


யுவனின் இசை நிகழ்ச்சியை பார்க்க வந்த ஹரிஷின் உறவினர்களுக்கும், பவுன்சர்களுக்கும் இடையே பெரும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஹரிஷ் கூறுகையில் "நான் கேள்வி கேட்டதற்காக என் மீது பவுன்சர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஹரிசை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பவுன்சர்கள் 10 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement