• Jul 25 2025

விக்ரம் படத்தின் டப்பிங்கில் நடந்த சம்பவம்- கமல் ரசிகர்களால் பீதிக்குள்ளான லோகேஷ் கனகராஜ்- இதுவரை தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததை அடுத்து  கார்த்தியின் கைதி படத்தை இயக்கினார். இப்படமும் வெற்றி பெற்றது.

இதனை அடுத்து தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்னும் படத்தை இயக்கியிருந்தார்.இப்படம் விஜய் ரசிகர்களுக்கு ஏற்றவாறு கமர்ஷியல் படமாக இருந்தது.இதன் பின்னர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்னும் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.


இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. உலகளவில் வசூலில் சாதனை படைத்த விக்ரம் திரைப்படத்தினால் இந்தியளவில் பிரபலமான இயக்குநராக உருவெடுத்தார் லோகேஷ்.விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைந்து தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார். 

மேலும் சமீபத்தில் இப்படத்தின் பூஜை மிகவும் எளிமையாக ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்நிலையில் தளபதி 67 திரைப்படம் கைதி, விக்ரம் பட பாணியில் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் உருவாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. 


இந்நிலையில் தற்போது தளபதி 67 பட வேலைகளில் பிசியாக இருக்கும் லோகேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் விக்ரம் படத்தை பற்றி பேசினார். அவர் கூறியதாவது, விக்ரம் படத்தின் முதல் பாதியின் டப்பிங்கை பார்த்து நான் ஷாக்காகிவிட்டேன். அதில் கமலுக்கு ஒரே ஒரு வசனம் தான் இருந்தது. எனவே உலகநாயகனை பார்க்க வந்த ரசிகர்களுக்கு படத்தின் முதல் பாதியில் குறைவான காட்சிகளில் கமல் வந்தால் என்ன ஆகும் என பயந்தேன். ஆனால் நான் பயந்தது போல் ஒன்றும் நடக்கவில்லை. படத்தை கமல் ரசிகர்கள் கொண்டாடினார்கள் என்று தெரிவித்தார்.


Advertisement

Advertisement