• Jul 26 2025

"ஹாப்பி பர்த்டே பாப்பா... லவ் யூ - நடிகை ரெஜினா இந்த நடிகரை காதலிக்கின்றாரா?- பிறந்த நாளில் வெளியாகிய உண்மை

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  'கண்ட நாள் முதல்' என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ரெஜினா.தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்னும் படத்தில் நடித்திருந்தார். இப்படம் அவருக்கு வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

இதனை அடுத்து தமிழில் சரியான வாய்ப்புக்கள் கிடைக்காததால் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் மாறி மாறி நடித்து வருகின்றார். இது தவிர தமிழில் கம்பேக் கொடுக்கும் விதமாக மாநகரம் என்னும் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் இவருக்கு வெற்றி படமாகவும் அமைந்திருந்தது.


மேலும் இப் பட நடிகரின் காதல் வலையில் வீழ்ந்து விட்டதாக சில கிசுகிசு எழ துவங்கியுள்ளது.இதற்கு காரணம், நடிகர் சந்தீப் கிஷன் இவரை வாழ்த்தி போட்டிருந்த பிறந்தநாள் வாழ்த்து தான். இது தான் இவர்கள் டேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்களா? என்கிற சந்தேகத்தை எழ வைத்துள்ளது. சந்தீப் கிஷன் தன்னுடைய வாழ்த்தில்  "ஹாப்பி பர்த்டே பாப்பா... லவ் யூ நீ எப்போதும் எல்லாவற்றிலும் சிறந்ததாக இருக்க விரும்புகிறேன். மகிழ்ச்சியாக இரு கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என கூறி இருந்தார்.


மேலும் இருவரும் சந்தோஷமாக இருக்கும் தருணத்தில் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இருவருக்குமே தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில், தற்போது வரை காதல் குறித்து வாய் திறந்தது இல்லை என்றாலும், இந்த தகவல் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement