• Jul 24 2025

அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாவிற்கு முன்னர் இன்னொரு நடிகையுடன் உறவில் இருந்தாரா..? நீண்ட நாள் கழித்து வெளிவந்த உண்மை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவரகாத் திகழ்ந்து வருபவர் நடிகர் அபிஷேக் பச்சன். இவர் பாலிவுட் திரையுலகில் மூத்த நடிகரான அமிதாப் பச்சனின் மகன் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.


அதுமட்டுமல்லாது கடந்த 2007ஆம் ஆண்டு உலக அழகியான நடிகை ஐஸ்வர்யா ராய்யை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது ஆராத்யா எனும் ஒரு மகளும் இருக்கிறார்.


இந்நிலையில் தான் சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது ஐஸ்வர்யா ராய்யை திருமணம் செய்துகொள்வதற்கு முன் பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரை காதலித்து வந்துள்ளாராம் அபிஷேக் பச்சன்.


இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு உண்மையாக காதலித்து வந்த நிலையில், இந்த உறவு திருமணம் வரை சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், திடீரென அமிதாப் பச்சன் இந்த திருமணத்திற்கு சம்மதிக்காத காரணத்தினால் இவர்களுடைய காதல் இறுதியில் தோல்வியில் முடிந்துள்ளது என பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றன. இதன்பின் தான் ஐஸ்வர்யா ராய்யை கரம்பிடித்துள்ளார் நடிகர் அபிஷேக் பச்சன். 

Advertisement

Advertisement