• Jul 24 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் முக்கிய நபர் கர்ப்பம்...அதுவும் நீண்டகாலத்திற்கு பிறகா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காடசியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோரஸ்.

இதில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தங்களது சொந்த வீட்டை இழந்து வேறொரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார்கள்.எனினும் அதே போல், மிகப்பெரிய டிப்பாட்மெண்டல் கடையாக இருந்தது தற்போது பழையபடி மளிகை கடையாக மாறிவிட்டது.

மேலும் இந்த இரண்டு விஷயத்திற்கும் பின்னணியில் மீனாவின் தந்தை இருந்து செயல்பட்டு வருகின்றார். அத்தோடு, தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் ஹோட்டலையும் மூடவைக்க வேறொரு நபர் திட்டம்தீட்டி அதை செய்தும் முடித்துள்ளார்.

ஆம், பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹோட்டலை அரசாங்க அதிகாரிகள் வந்து, கடைக்கு சீல் வைத்துவிட்டனர். அத்தோடு எதார்க்காக வைத்துள்ளார்கள் என்பதை நாளை ஒளிபரப்பாகவிருக்கும் எபிசோடை பார்த்தால் தெரியும்.

திருமணம் ஆனதில் இருந்து குழந்தைக்காக ஏங்கி கொண்டிருந்த நபர் முல்லை. ஆம், கதிர் - முல்லை ஜோடியால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என ஏற்கனவே மருத்துவர் தெரிவித்திருந்தார். அதற்காக மருத்தவ ரீதியான சிகிச்சை செய்தபின்பும் பலனளிக்கவில்லை.



இவ்வாறுஇருக்கையில், தற்போது முல்லை கர்ப்பமாகிவிட்டார் எனும் நல்ல செய்தி வெளியாகியுள்ளது. இதுவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த ட்விஸ்ட் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement