• Jul 25 2025

கமலை ஜாதியை வைத்து பகிரங்கமாக திட்டிய பிரபல நடிகர் -அதுவும் மேடையில் வைத்தா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து எதிலும் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் கமல்ஹாசன்.இவர் எப்போதும் கடவுளே இல்லை என்று நாத்திகம் பேசும் கூட்டத்தை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் கமலை ஜாதி வைத்து பகிரங்கமாக திட்டி இருக்கிறார் பிரபல இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன்.

அதுமட்டுமின்றி கமலிடம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும்.மேலும்  அவர் ஒரு மிகப்பெரிய விஷ ஊசி என்று மேடையில் பேசி  ஷாக்கடைய வைத்துள்ளார். கமல் ஒரு நல்ல ஐயங்கார். அதனால் தான் அவருடைய படங்கள் ஆன தசாவதாரம், விஸ்வரூபம் போன்ற படங்களில் எல்லாம் இதை வெளிப்படுத்தி உள்ளார்.

அத்தோடு  அவர் தசாவதாரம் படத்தில் ஒரு லாரியில் தப்பித்து போவது போல் காட்டி  உள்ளார்.மேலும்  அதில் ராமர் துணை, ஸ்ரீராமஜெயம் ஒன்று எழுதி இருக்கும். அப்படிப்பட்டவர்களிடமெல்லாம் ரொம்ப வில்லங்கமானவர்கள் விச ஊசிகள். அவர்களிடம் இருந்து ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்று தெரிவித்தார்.

அத்துடன் கமலின் படங்களில் ஹாலிவுட் தொழில்நுட்பங்களை எல்லாம் பயன்படுத்துவது சரிதான். ஆனால் ஹாலிவுட் அரசியலை நம்மிடம் திணிக்க கூடாது. அந்த வேலையை தான் கமல்ஹாசன் செய்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவிற்கு கமல் ஒத்து ஊதிக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

படாத பாடுபட்டு பிரிட்டிஷ்கரர்களை இந்தியாவை விட்டு விரட்டி அடித்தோம். ஆனால் இப்போது கமலஹாசன் பிரிட்டிஷ் மகாராணியை மறுபடியும் அழைத்து வந்து, அவரை வைத்து நிகழ்ச்சியையும் நடத்துகிறார்.அத்தோடு  மறுபடியும் அவர்களுக்கு கைகட்டி கொண்டு, இருக்க வைக்க பார்க்கிறாரா என்று கேள்வி எழுப்புகிறார்.

அத்தோடு  ஹாலிவுட்டில் செட்டிலாக வேண்டுமென்ற கமலின் கனவுக்காக கோலிவுட்டை பகடைக்காயாக உருட்டுகிறார் என்று மணிவண்ணன் உலக நாயகன் கமலஹாசனை குறித்து வெளிப்படையாகப் பேசி சர்ச்சையை கிளப்பிய பேட்டி ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.


Advertisement

Advertisement