• Jul 25 2025

படுக்கையறைக்கு வாங்க.. புகைப்படம் எடுக்க வந்தவர்களிடம் கூறிய பிரபல நடிகர்.. சர்ச்சையைக் கிளப்பிய சம்பவம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தி திரையுலகில் முன்னணி நடிகர்களில் இருப்பவர் சயீப் அலிகான். இவர் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் சமீபத்தில் இந்தி நடிகை மலைகா அரோராவின் தாயார் பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் சயீப் அலிகானும் கரீனா கபூரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். பின்னர் விருந்து முடிந்து இருவரும் காரில் தங்களுடைய வீட்டுக்கு திரும்பினார்கள். 


அப்போது வீட்டின் எதிரே சில போட்டோகிராபர்கள் அவர்களுக்காக காத்து நின்றனர். சயீப் அலிகான் மனைவியுடன் வந்ததும் இருவரையும் சேர்த்து புகைப்படம், எடுக்க அவர்கள் முண்டியடித்தனர். அதுமட்டுமல்லாது அவர்களை பின் தொடர்ந்து கேட்டை தாண்டி அத்துமீறி வீட்டின் கட்டிட வளாகத்துக்குள் சென்றுவிட்டனர். 

இதனால் கோபமடைந்த நடிகர் சயீப் அலிகான் "ஒன்று செய்கிறீர்களா. எங்கள் படுக்கை அறைக்கே வந்து விடுங்கள்' என்று கோபமாக கத்தினார். இதனைக் கேட்டதும் உடனே போட்டோகிராபர் பின்வாங்கினர். பின்னர் போட்டோகிராபர்களை பார்த்து மிகவும் கோபமாக கையை அசைத்தபடி வீட்டுக்குள் சென்று கதவை ஓங்கி சாத்திக் கொண்டார். 


இந்நிலையில் சயீப் அலிகான் கோபப்பட்டு பேசும் வீடியோஆனது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் சமீபத்தில் இந்தி நடிகை அலியாபட் வீட்டுக்குள் அறையில் இருந்ததை எதிர்வீட்டு மாடியில் நின்று சிலர் புகைப்படம் எடுத்தது பெரும் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து தற்போது சயீப் அலிகானை புகைப்படம் எடுக்க முயன்ற விடயமும் சர்ச்சையாக மாறி இருக்கின்றது.

Advertisement

Advertisement