• Jul 24 2025

ஜெயம் ரவிக்கு அடித்த அதிஷ்டம்...ஒன்றா இரண்டா வரிசையில் இத்தனை படங்கள்..? வெளியானது முழு விபரம்...!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழ்பவர் தான் ஜெயம் ரவி.இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்த லிஸ்றில் உள்ளார்.ஆனால் கோமாளி படத்திற்கு பின் வாய்ப்புகள் இல்லாமல் ஒரு வருடம் எந்த படமும் வெளிவரவில்லை. அதன் பின் 2021 ஆம் ஆண்டு பூமி திரைப்படம் வெளிவந்தது. ஆனால் இது ஓடிடி மூலம் தான் வெளியாகி இருந்தது. இதன் பின் இவருக்கு சோலா ஹீரோவாக நடிப்பதற்கு எந்த பட வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது.அதனால் கடந்த வருடம் பொன்னியின் செல்வன் படத்தில் அருள் மொழி வர்மன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

இந்த படம் மூலம் பழைய மார்கெட்டை பிடித்தார் ஜெயம் ரவி.இதன் காரணமாக தற்பொழுது 5 படங்களை கையில் வைத்து கொண்டு ரிலீஸிற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.இதனை கேள்விப்பட்ட பலரும் ஜெயம் ரவிக்கு இந்த வருடம் அடித்தது அதிஷ்டம் எனக் கூறி வருகின்றார்கள்.

அதாவது வருகின்ற மார்ச் 10 ஆம் தேதி அகிலன் என்ற திரைப்படம் வெளிவர உள்ளது.அத்தோடு இவ் திரைப்படத்தின் பரஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி இருந்தது.இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் ஒரு கதாப்பாத்திரத்தில் கடற்படை அதிகாரியாக நடித்துள்ளார் என்றும் சொல்லப்படுகின்றது.



அடுத்த திரைப்படம் ஜூன் மாதம் இறைவன் எனும் திரைப்படமும் செப்டம்பர் மாதம் சைரன் மற்றும் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படம் என்று கூறப்படுகின்றது.இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.இவ்வாறு படங்களை கையில் வைத்துக்கொண்டு ரிலீசிற்கு காத்துக் கொண்டு இருக்கிறார் ஜெயம் ரவி.

இது மட்டுமல்லாது 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 முழுமையானதாக உள்ளது.இத்துடன் தனி ஒருவன் 2ல் கமிட் ஆகியுள்ளார். மேலும் இந்த படத்திற்கான தகவல் கூடிய விரைவில் வெளிவர உள்ளது என்று கூறப்படுகின்றது. இப்படி ஜெயம் ரவி தொடர்ந்து பிசியாக நடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது பொன்னியின் செல்வன் அருள்மொழி வர்மன் கதாபாத்திரம் என்று கூறப்படுகின்றது.

நான்கு வருட இடைவெளிக்குப் பின்னர் ஜெயம் ரவி வந்தாலும் இந்த வருடம் மொத்தமாக ஐந்து படங்கள் ரிலீஸ்க்கு வருவதால் இவருக்கு கண்டிப்பாக வெற்றி நிச்சயம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூறப்படுகின்றது.சோலோ படமாக கொடுக்க முடியாத நிலைமையில் இருந்த ரவிக்கு வருகிற படங்கள் மூலம் இவருக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement