• Jul 24 2025

'துணிவு' க்குப் போட்டியான 'வாரிசு' படத்தின்... தமிழக உரிமையைத் தட்டித் தூக்கிய பிரபல நிறுவனங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'நாளைய தீர்ப்பு' என்ற திரைப்படத்தின் மூலம் கிடைத்த கதாநாயகன் என்ற அந்தஸ்த்தை தற்போது 65படங்கள் கடந்தும் தக்க வைத்திருப்பவர் நடிகர் விஜய். இந்நிலையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படம் தற்போது வெளியாக்க காத்திருக்கின்றது.


அதாவது தெலுங்கு சினிமா இயக்குநர் வம்சி விஜய்யை வைத்து முதன்முறையாக இயக்கியுள்ள திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடிக்கின்றார். அதுமட்டுமல்லாது குஷ்பு, சரத்குமார், ஷ்யாம், கணேஷ் என ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.


மேலும் குடும்பம் கலந்த எமோஷ்னல் கதையாக படம் இருக்கும் என படக்குழுவினர் ஏற்கெனவே அறிவித்த நிலையில் பட ரிலீஸிற்காக ரசிகர்கள் பலரும் ஆவலாக காத்திருக்கின்றார்கள். இந்நிலையில் அஜித்தின் துணிவு படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதால் விஜய்யின் வாரிசு படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் நிறைய சிக்கல் இருப்பதாக ஏற்கெனவே கூறப்பட்டு வந்தது. 

இதனைத் தொடர்ந்து விஜய்யின் வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்பவர்களின் விவரத்தை படக்குழுவே வெளியிட்டுள்ளனர். அதாவது வாரிசு திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை செவன் ஸ்கிரீன் நிறுவனம் வாங்கி இருந்தது. இருந்தாலும், அந்நிறுவனம் ரெட் ஜெயண்ட்டிடம் சில ஏரியாக்களை கொடுக்க உள்ளதாக தகவல் ஒன்று பரவி வந்தது.


தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, நார்த் ஆர்காடு, சவுத் ஆர்காடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஏரியாக்களில் விஜய்யின் வாரிசு படத்தை வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கி உள்ளதாக செவன் ஸ்கிரீன் நிறுவனமே தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement