• Jul 25 2025

காஜல் அகர்வாலின் மகனா இது... இந்தளவிற்கு வளர்ந்து விட்டாரே... தீயாய் பரவும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். மேலும் தெலுங்கில் பல படங்களிலும், ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.


ஆரம்பத்தில் சுமாரான படங்களில் நடித்தாலும் பின்னர் தனது திறமையினால் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தினார் காஜல் அகர்வால்.  அந்தவகையில் தமிழிலும் சும்மா இல்ல, இன்று நம்பர் ஒன் நடிகராக வலம்வரும் தளபதி விஜய்யுடன் மூன்று படம், தலயுடன் ஒருபடம் என கிட்டத்தட்ட அனைத்து பெரிய ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார். 


இவ்வாறு பல ரசிகர்களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்து வந்த காஜல் அகர்வால் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்த காஜல், தனது மகனுக்கு Neil Kitchlu என்று பெயர் சூட்டியுள்ளார்.


இந்நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மகனுடன் இருக்கும் அழகிய வீடியோ ஒன்றினைப் பகிர்ந்திருக்கின்றார். அதில் இவரது மகன் நன்றாக வளர்ந்து விட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி உள்ளனர். அத்தோடு இந்த வீடியோவையும் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement