• Jul 25 2025

திடீரென சுயநினைவை இழந்த பிரபல பாடகி.. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.. பெரும் பரபரப்பில் திரையுலகம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாம்பே ஜெயஸ்ரீ எனப் பரவலாக அறியப்படும் ஜெயஸ்ரீ இராம்நாத் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்தவகையில் இவர் தென்னிந்தியத் திரைப்படங்களில் முன்னணி இசையமைப்பாளர்களான ஹாரிஸ் ஜயராஜ், இளையராஜா, ஏ. ஆர். ரகுமான், வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் பல வெற்றித் திரைப்பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது அவர் வயலின் வாத்தியக்கலைஞர் லால்குடி ஜெயராமனின் சீடரரும்ஆவார்


இந்நிலையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தற்போது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில், நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த நிலையில் இவர் ஓட்டலில் தங்கி இருந்தபோது, திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.


இதனைத் தொடர்ந்து சுயநினைவை இழந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்தோடு அவருடைய உடல்நிலை சற்று ஆபத்தான நிலையில் உள்ளதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் ஆனது தற்போது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement