• Jul 25 2025

கவர்ச்சி நடனம் ஆட சன்னி லியோன் விதித்த நிபந்தனைகள்... உடனே ஏற்றுக் கொண்ட படக்குழுவினர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாத் திரையுலகில் ஆபாச படங்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக அனைவராலும் அறியப்பட்ட ஒருவரே சன்னி லியோன். இவர் தற்போது இந்தி, தமிழ், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் படு பிசியாக நடித்து வருகிறார். 


அந்தவகையில் சன்னி லியோன் தமிழில் 'வட கறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். அதுமட்டுமல்லாது தற்போது 'வீரமாதேவி, ஓ மை கோஸ்ட்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் தன்னுடன் கவர்ச்சி நடனம் ஆட சன்னிலியோன் புதிய புதிய நிபந்தனைகளை விதித்துள்ளார். 


அதாவது 'ரோஜா மலரே, அடடா என்ன அழகு, சிந்துபாத்' உள்ளிட்ட பல படங்களை எடுத்து சினிமாவில் பிரபலமான டி.எம்.ஜெயமுருகன் தற்போது 'தீ இவன்' என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதில் கார்த்தி, சுகன்யா, ராதாரவி, சுமன் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடிக்கின்றனர். இந்த படத்தின் இயக்குநர் கவர்ச்சி நடனம் ஆட சன்னிலியோனை அணுகிய போது கதையை கேட்டு உடனே ஆட சம்மதித்துள்ளார். 


அதுமட்டுமல்லாது அப்பட இயக்குநரிடம் தான் சில நிபந்தனைகளையும் கூறி உள்ளார். அந்தவகையில் பாடல் காட்சி படப்பிடிப்பில் குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது, கொரோனா நோய் தடுப்பு மருத்துவமுறைகள் பின்பற்ற வேண்டும், என்னுடன் ஆடுபவர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்றெல்லாம் பல நிபந்தனைகள் விதித்தாராம் சன்னிலியோன். சன்னி லியோனின் இந்த நிபந்தனைகளை படக்குழுவினர் ஏற்றுக்கொண்டு உள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement