• Jul 24 2025

செண்டை மேளம் முழங்க கதகளி ஆட்டத்துடன் தொடங்கிய ஃபினாலே- குஷியான ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


2017ம் ஆண்டு பிக் பாஸ் சீசன்1 தமிழில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருப்பதால் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்துள்ளது. 5 சீசனுக்கும் கிடைத்த வரவேற்பால் ஆறாவது சீசன் புதுபுது டாஸ்குகளுடன் பரபரப்பாக ஒளிபரப்பானது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் அரசியல் பிரமுகரான விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் கலந்து கொண்டார்.

விக்ரமா...அசீமா இதில் யார் டைட்டிலை வெல்லுவார் என்பதை தெரிந்து பிக் பாஸ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல அரசியல் பிரமுகர்களும் ஆர்வமாக உள்ளனர். விக்ரமனுக்கு விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் ட்விட்டரில் வாக்களிக்கும்படி கேட்டிருந்தார். இது பலவிதமான சலசலப்புகளை உருவாக்கியது. விக்ரமன் அரசியல்வாதியாக இருந்தாலும், எந்த இடத்திலும் அதை வெளிப்படுத்தியது இல்லை. அப்போதும் அங்கு நடக்கும் பிரச்சனைகளுக்கு முதல் ஆளாக குரல் கொடுத்துள்ளார்.


இந்நிலையில், பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில் மேலதாளம், செண்டை மேளம் முழங்க கதகளி ஆட்டத்துடன் பினாலே தொடங்கி உள்ளது. மேலதாளம் வாத்தியத்தை கமல் உற்சாகமாக ரசித்து பார்க்கிறார். மற்ற போட்டியாளர் கை தட்டி, விசில் அடித்தும் ஆட்டம் போட்டுள்ளனர். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு செம எஞ்சாய்மென்ட் என நிகழ்ச்சியை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

முன்னதாக காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், நாயகன் வரான் என்று விக்ரம் படத்தின் பாடலின் பிஜிஎம்முடன் கமல் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். பல கோடி ரசிகர்கள், பல லட்சம் வாக்குகள், ஒரே வெற்றியாளர்... The biggest entertainment show bigg boss season 6 grand finale என்ற கூறி நிகழ்ச்சியின் சுவாரசித்தை கூட்டி உள்ளார்.

Advertisement

Advertisement