• Jul 24 2025

சூர்யா 42 படத்தின் ஹாண்ட்சம் லுக்.. வைரல் புகைப்படம் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா நடிகர் சூர்யாவுக்கு கடந்த இரண்டு வருடங்களாகவே கோலிவுட்டில் ஏறுமுகம் தான். அதிலும் இவர் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு இவரது மார்க்கெட் எகிறி விட்டது. 

இந்த நிலையில் சூர்யாவின் அஸ்தானை இயக்குநரான சிறுத்தை சிவா இயக்கும் சூர்யாவின் 42-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தில் சூர்யாவின் லுக் என்ன என்பதை வெளிப்படுத்தும் விதமாக அவருடைய சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகிய வைரலாக பரவுகிறது. இதில் சூர்யாவுக்கு 10 வயது குறைந்து இளமையாக ஹாண்ட்சம் லுக்கில் இருக்கிறார்.

மேலும் சூர்யா இதில் மீசை மற்றும் தாடி உடன் ரசிகைகளை கவரும் விதத்தில் காட்சியளிக்கிறார். மேலும் தற்போது சூர்யா நடித்து கொண்டிருக்கும் சூர்யா 42 திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் க்ரியேஷன் நிறுவனமும் இணைந்து மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது.

இதில் சூர்யாவுடன் திஷா பதானி, மிருணாள் தாகூர், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். சூர்யா 42 படத்தில் சூர்யாவின் நிகழ் கால போஷனில் திஷா பதானியும், பீரியட் போர்ஷனில் சூர்யாவிற்கு ஜோடியாக மிருணாள் தாகூரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் 3டி முறையில் உருவாகும் சரித்திர திரைப்படம் ஆகும். இதில் சூர்யா மட்டும் அரத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனத்தார் என 5 கதாபாத்திரங்களில் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

அதேபோல் படம் 1000 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையும் தற்போதைய காலத்திற்கு ஏற்றார் போல் நடக்கும் கதைகளையும் கொண்டு அமைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் தற்போது வெளியாகியிருக்கும் சூர்யாவின் வித்தியாசமான லுக்கில் இருக்கும் புகைப்படம் சூர்யா 42 படத்தின் மீதான எதிர்பார்ப்பை  அதிகரிக்க செய்திருக்கு என்றே சொல்லலாம்.

Advertisement

Advertisement