• Jul 24 2025

விடுதலை படத்தால் சூரிக்கு அடித்த ஜாக்பாட்.... புதிய காரின் விலை இத்தனை கோடியா..?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

காமெடி நடிகராக அறிமுகமான நடிகர் சூரி விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் எந்த மாதிரி வெற்றி என்றால் இவர்தான் இந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார் என்று சொல்லும் அளவிற்கு தன்னுடைய நடிப்பை கொடுத்திருக்கிறார்.இதற்கு கிடைத்த வரவேற்பே வைத்து இவருக்கு தொடர்ந்து ஹீரோவாக பட வாய்ப்புகள் தேடி வந்து கொண்டே இருக்கிறது. 

அப்படிப்பட்ட இவர் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக மாறிவிட்டார். தற்போது ரியல் லைஃப்லும் ஹீரோவாக மாறி இருக்கிறார் என்று சொல்லலாம். அதாவது பொதுவாக யாராக இருந்தாலும் அவர்களுக்கு கெத்தாக இருப்பது அவர் வைத்திருக்கும் கார் தான். அந்த அளவுக்கு பந்தாவாக கார் வாங்குவதில் அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள்.

அதேபோல தான் தற்போது சூரியும் அந்த விஷயத்தில் இறங்கிவிட்டார். அதாவது ஹீரோவாக ஆகிவிட்டால் கெத்தாக இருக்க வேண்டும் என்று BMW காரை 1.5 கோடிக்கு வாங்கி இருக்கிறார்.

இதுவே இவரை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு போகிறது. அடுத்ததாக இவர் வாங்கிய காருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் சூரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இது உன்னுடைய வெற்றிக்கு கிடைத்த பரிசு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.

இதே போல் தொடர்ந்து நிறைய படங்களில் ஹீரோவாகவும் நல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார். தற்போது இவருடைய விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்று இவருடைய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement

Advertisement