• Jul 24 2025

அடேங்கப்பா..ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

உலக அழகிப் பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் மணிரத்னத்தின் இருவர் படம் மூலம் நடிகையானார். பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கு முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றார். ஐஸ்வர்யா ராய்க்கு பிறகு எத்தனையோ பேர் உலக அழகிப் பட்டம் வென்றுவிட்டார்கள். ஆனாலும் உலக அழகி என்றாலே பலருக்கும் இன்றும் நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா ராய் தான்.

கோலிவுட், பாலிவுட் தவிர்த்து ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். உலகம் முழுவதும் பிரபலமான அவர் பல முன்னணி பிராண்டுகளின் அம்பாசிடராக இருக்கிறார்.

 படங்கள் தவிர்த்து விளம்பர படங்கள் மூலமும் கை நிறைய சம்பாதிக்கிறார். அழகியும், நடிப்பு ராட்சசியுமான ஐஸ்வர்யா ராய் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஆராத்யா என்கிற மகள் இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு குறித்த விபரம் வெளியாகியிருக்கிறது. ஐஸ்வர்யா ராய்க்கு பல பங்களாக்கள், நிலம் இருக்கிறது. மேலும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ஆடி ஏ8எல் உள்பட பல சொகுசு கார்கள் வைத்திருக்கிறார்.

அவரின் சொத்து மதிப்பு ரூ. 776 கோடி மட்டுமே என தகவல் வெளியாகியுள்ளது. படம் ஒன்றுக்கு ரூ. 12 கோடி சம்பளம் வாங்குகிறார் ஐஸ்வர்யா ராய் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement