• Jul 25 2025

வெளியானது உலகின் சிறந்த 50 நடிகர்களின் பட்டியல்... அதில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய நடிகர்.. யார் தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'பாஜி' என்ற தொலைக்காட்சி தொடர் ஒன்றில் மூலம் தன்னுடைய நடிப்பு பயணம் தொடங்கியவரே நடிகர் ஷாருக்கான். இவர் 1992-இல் 'தீவானா' என்ற படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் நடிப்பில் உருவான 'தில்வாலே துல்ஹனியா லெ ஜாயங்கே' என்ற காதல் படமே இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து மளமளவென முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். 


அத்தோடு இதுவரை 100 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது தீபிகா படுகோனுடன் நடித்துள்ள 'பதான்' படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இதில் இடம்பெற்ற பாடல் காட்சியில் தீபிகா படுகோன் காவி நீச்சல் உடையில் நடித்தது சமீபத்தில் மிகப்பெரிய எதிர்ப்பை கிளப்பி உள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தை தடை செய்யும்படி போராட்டங்கள் நடக்கின்றன.


இந்நிலையில் திரையுலகைப் பொறுத்தவரையில் ஆண்டுதோறும் சிறந்த நடிகர், மற்றும் சிறந்த படங்களுக்கான பட்டியல் வெளியாவது வழமை. அந்தவகையில் தற்போது உலகின் 50 சிறந்த நடிகர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதாவது திரையுலக ரசிகர்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் இதை தயார் செய்து வெளியிட்டு உள்ளனர். 


இந்தப் பட்டியலில் பல முன்னணி ஹாலிவுட் நடிகர்கள் இடம்பெற்று உள்ளனர்.  அந்த வரிசையில் ஷாருக்கான் பெயரும் இந்த 50 சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது. அதுமட்டுமல்லாது இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய நடிகர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையறிந்த ஷாருக்கான் ரசிகர்கள், இதை அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கொண்டாடி வருகிறார்கள்.

Advertisement

Advertisement