• Jul 25 2025

கணவரின் துயரிலிருந்து மீனாவை மீட்டெடுக்க.. பிரபலங்கள் முன்னிலையில்.. கலா மாஸ்டர் செய்யப் போகும் முக்கிய விஷயம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'கண்ணழகி' என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவரே நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அத்தோடு கோலிவுட்டில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். 


இவ்வாறு சினிமாவில் பிசியாக இருந்து வந்த மீனா கடந்த 2009-ஆம் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார். இத்தம்பதிக்கு நைனிகா என்கிற அழகிய பெண் குழந்தையும் உள்ளது.


சந்தோசமாக இருந்து வந்த இவர்களது வாழ்க்கையில் புயல் வீசியது போல கடந்த ஆண்டு நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார். இவருடைய மறைவு குடும்பத்தினருக்கு மட்டுமன்றி திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.


வித்யாசாகரின் மறைவுக்கு பின் மீனாவிற்கு ஒவ்வொரு தருணத்திலும் உறுதுணையாக இருந்து வருகிறார் கலா மாஸ்டர். இந்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக தனது கணவரின் இழப்பில் இருந்து மீண்டு வந்துகொண்டிருக்கும் மீனாவிற்கு தற்போது மகிழ்ச்சியை அள்ளித் தரும் வகையில் கலா மாஸ்டர் ஒரு விஷயத்தை செய்யப் போவதாக தகவல் ஒன்று வெளிவந்திருக்கின்றது. 


அதாவது திரையுலகில் மீனா 40 ஆண்டுகாலத்தினை நிறைவு செய்துள்ள நிலையில், 'மீனா 40' என விழா ஒன்றை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளாராம் கலா மாஸ்டர். மேலும் குழந்தை நட்சத்திரமாக 1982-இல் நடிக்க தொடங்கிய மீனா கடந்த 2022-ஆம் ஆண்டுடன் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால் இந்த விழாவை நடத்த கலா மாஸ்டர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொள்ளப்போவதாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயம் அறிந்த மீனா ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement