• Jul 24 2025

பொது இடத்தில் வைத்து சாக்ஷி அகர்வாலுக்கு முத்தம் கொடுத்த சிம்புவின் தீவிர ரசிகன்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாத் திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை சாக்ஷி அகர்வால். அந்தவகையில் இவர் 'காலா, விஸ்வாசம், அரண்மனை 3' போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ரொம்பவே பிரபலமானார்.அத்தோடு இதன் வாயிலாக பல ரசிகர்களையும் தனக்கென உருவாக்கிக் கொண்டார்.


இந்நிலையில் நேற்றைய தினம் சாக்ஷி அகர்வாலின் 'நான் கடவுள் இல்லை' படம் ரிலீஸ் ஆகி இருந்தது. இப்படத்தின் ப்ரீமியர் ஷோவில் நடிகரும் மற்றும் சிம்புவின் தீவிர ரசிகருமான கூல் சுரேஷ் கலந்து கொண்டுள்ளார்.


அந்த சமயத்தில் பத்திரிகையாளருக்கு பதில் அளித்து கொண்டிருந்த நடிகை சாக்ஷியின் கன்னத்தில் திடீரென முத்தம் கொடுத்து விட்டாராம் கூல் சுரேஷ். இந்த சம்பவமானது அங்கிருந்த பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


இதனைத் தொடர்ந்து சிலர் "பொது இடத்தில இப்படியா நடந்து கொள்வது" என்று தாறுமாறாக கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Advertisement

Advertisement