• Jul 25 2025

கதிரை கத்தியால் குத்த போன கூலிப்படை-கதறி துடிக்கும் முல்லை...பரபரப்புடன் வெளியான ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். நான்கு சகோதரர்களின் ஒற்றுமை எடுத்துக் காட்டுவதால் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

இந்த சீரியலை பார்த்து பல குடும்பங்கள் சேர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.இவ்வாறுஇருக்கையில் இந்த சீரியலில் பலருக்கும் பிடித்த ஜோடி தான் கதிர்-முல்லை.

இவர்கள் இருவரும் தற்போது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.அதாவது தமது குழந்தைக்காக வேண்டிய கடனை அடைத்து விட்டே குடும்பத்திற்குள் நுழைவதாக சபதம் போட்டுள்ளார்கள்.இந்நிலையில் இருவரும் மதுரையில் நடக்கும் சமையல் போட்டியில் கலந்து கொண்டு சில சுற்றுக்களிலும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில் அந்த போட்டியில் சிலர் இவர்களுடன் சண்டை போட்டு கதிருக்கு அடிக்கிறார்கள்.இவ்வாறு இருக்கையில் முல்லை ஜீவாவிற்கு போன் பண்ணி நடந்த விடயத்தை கூற ஜீவா மூர்த்திக்கு கூறி இருவரும் மதுரைக்கு கோவத்துடன் புறப்பட்டு வருகிறார்கள்.இவ்வாறு இருக்கையில் கதிருக்கு வில்லன்கள் கத்தியால் குத்த வர முல்லை கத்துகின்றார்.இவ்வாறு பரபரப்புடன் ப்ரமோ வெளியாகி உள்ளது.

இதோ அந்த ப்ரமோ...







 


Advertisement

Advertisement