• Jul 24 2025

சிம்புவால் நாசமா போன திரைப்படம்.. வெற்றி இயக்குநரை ஆள் அட்ரஸ் தெரியாமல் செய்த சம்பவம்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

 தில், தூள், கில்லி போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் தரணி சிம்புவை வைத்து ஒஸ்தி என்ற படத்தை இயக்கியிருந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு ரிச்சா, ஜித்தன் ரமேஷ், ரேவதி உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் வெளிவந்தது. ஆனால் ரசிகர்களின் போதிய வரவேற்பு கிடைக்காததால் இது பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்தது.

இயக்குநர் நினைத்தபடி படத்தை எடுக்க முடியாமல் திணறி இருக்கிறார். மேலும் சிம்புவுக்காக ஒவ்வொரு விஷயத்தை மாற்றப் போய் மொத்த படமும் சொதப்பலில் தான் முடிந்திருக்கிறது. இப்படி சிம்புவால் நாசமாய் போன இந்த படத்திற்கு பிறகு தரணி இதுவரை எந்த படத்தையும் இயக்கவில்லை.

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கும் மேலாக அவர் படங்களை இயக்காமல் இருக்கிறார். அந்த வகையில் விக்ரம், விஜய்க்கு பெரும் அடையாளத்தை கொடுத்த இயக்குநர் இப்போ ஆள் அட்ரஸ் தெரியாமல் போயிருக்கிறார். இதற்கு சிம்பு ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. 

இப்படி பல சேட்டைகளை செய்து வந்த அவர் இப்போது அதை எல்லாம் ஓரங்கட்டி நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement

Advertisement