• Jul 23 2025

ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு அர்ஜுன் உடனே ஓகே சொல்ல... உமாபதியிடம் இருக்கும் இந்த விஷயம் தான் முக்கிய காரணமா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனது தந்தையை போல சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றார். அந்தவகையில் இவர் விஷால் நடிப்பில் 2013-ஆம் ஆண்டு வெளியான பட்டது யானை என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, இதனையடுத்து மேலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கின்றார்.


இந்நிலையில் நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதியும், ஐஸ்வர்யாவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்களாம். இவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த எந்த சரியான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. 

அந்தவகையில் ஐஸ்வர்யா - உமாபதி திருமணத்திற்கு அர்ஜுன் ஓகே சொன்னமைக்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2021ஆம் ஆண்டு அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டிருந்தார்.


அந்த நிகழ்ச்சியின் போது உமாபதியினுடைய நல்ல பழக்கங்களும், நடவடிக்கைகளும் அர்ஜுனுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டதாம். இதனால் தான் ஐஸ்வர்யா - உமாபதி திருமணத்திற்கு அர்ஜுன் ஓகே சொல்லியதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன

Advertisement

Advertisement