• Jul 25 2025

அனைவரும் எதிர்பார்த்திருந்த ஷோ விஜய் டிவியில் விரைவில் ஆரம்பம்... குஷியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் ஒளிபரப்பாகும் டிவி சேனல்களின் வரிசையில் எப்போதுமே முன்னிலையில் இருந்து வருவது விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகும் அனைத்து வகையான நிகழ்ச்சிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. அது சீரியலாக இருந்தாலும் சரி, ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் சரி எளிதில் மக்களை கவர்ந்து விடுகின்றன.

அதிலும் குறிப்பாக ரியாலிட்டி ஷோக்களை பொறுத்தவரையில் எப்போதுமே சிரிப்பிற்குப் பஞ்சம் இருப்பதில்லை. அதாவது இந்த நிகழ்ச்சிகள் கவலை மறந்து ரசிகர்களை வாய் விட்டு சிரிக்கச் சொல்கின்றன.


அவ்வாறான ஒரு சூப்பர் ஹிட் ஷோக்களில் ஒன்று தான் Mr & Mrs Chinnathirai. இந்த நிகழ்ச்சியானது ஏற்கெனவே 4சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 5-ஆவது சீசன் ஆரம்பமாக இருக்கிறது. இதனை வழமையாக மாகாபா ஆனந்த் கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


எனவே இந்த நிகழ்ச்சி எப்போது ஆரம்பமாகிறது..? போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement