• Jul 24 2025

சாமிப் பாடலை காப்பி அடித்த தமன்... அந்த ஆண்டவனையும் விட்டு வைக்கலயா... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தன்னுடைய சினிமாத் திரைப்பயணத்தில் 65 படங்களைக் கடந்து விட்ட நிலையில் 66 ஆவது படமாக வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் 'வாரிசு'. தில் ராஜு தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். 


இப்படத்தின் வாயிலாக ராஷ்மிகா முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் உடைய முதலாவது பாடல் ' ரஞ்சிதமே' நேற்று மாலை வெளியானது. விஜய் தனது சொந்தக் குரலில் பாடி வெளிவந்த இப்பாடல் வெளிவந்த நேரம் தொடக்கம் தற்போதுவரை Youtubeல் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.


அதுமட்டுமல்லாது ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ள இப்பாடல் நெட்டிசன்கள் மத்தியில் எதிர்மறையான ட்ரோலிலும் சிக்கியுள்ளது. அதாவது ஏற்கனவே இப்பாடல் 'மொச்ச கொட்ட பல்லழகி' பாடலின் காப்பி எனப் பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.


இந்நிலையில் இப்பாடல் மற்றுமொரு சாமிப்பாடலின் காப்பி எனக் கூறப்படுகின்றது. அதாவது 2000ஆம் ஆண்டு வெளிவந்த 'கண் திறந்து பாரம்மா' படத்தில் இடம்பெறும் 'உன்னைத்தானே அம்மானு எல்லோருக்கும் சொல்லி வெச்ச' பாடலின் காப்பி தான் ' ரஞ்சிதமே' என்று வீடியோவுடன் ட்ரோல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement