• Jul 23 2025

அரசியலின் அடுத்த நகர்வு... கெட்டப் மாற்றி பனையூருக்கு வந்த விஜய்... தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் நடிகர் விஜய், விரைவில் அரசியலில் நுழைய உள்ளார் என்பது தான் தற்போது கோலிவுட்டில் ட்ரெண்டிங் நியூஸாக மாறியுள்ளது. தனது அரசியல் எண்ட்ரி குறித்து விஜய் இதுவரை வாய்த்திறக்கவில்லை என்றாலும், அவரது நகர்வுகள் ஒவ்வொன்றும் அதனை ஆணித்தரமாக அறிவிக்கும் வகையில் உள்ளது. 


அந்தவகையில் கடந்த மாதம் சென்னையில் பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்தி இருந்தார். அந்த நிகழ்வில் பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்து இருந்தார்.


இதனையடுத்து நேற்று லியோ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், உடனடியாக மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களை விஜய் இன்று சந்திக்க உள்ளதாக அறிவிப்பு ஒன்று அதிரடியாக வெளியானது.  அதாவது பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தின் இன்று முதல் 3 நாட்களுக்கு விஜய் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக அந்தத் தகவல் வெளியாகியுள்ளது. 


இந்நிலையில் இன்று ஆலோசனைக்கு பனையூர் அலுவலகத்திற்கு வந்த நடிகர் விஜய்யின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதில் அவரின் கெட்டப் ரசிகர்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement