• Jul 24 2025

அரசியலில் களமிறங்கவுள்ள விஜய்... கட்சியின் சின்னம் இதுதானாம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் விஜய்.பல விமர்சனங்கள், எதிர்மறையான கருத்துக்கள் இவை எல்லாவற்றையும் கடந்து இன்று ஒரு மாபெரும் நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார் விஜய். இவரது நடிப்பில் லியோ என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.


சமீப காலமாக தன் படங்களின் மூலமாகவும் பாடல்களின் மூலமாகவும் அரசியலை வெளிப்படையாகவே கூறி வந்த விஜய் இன்று தைரியமாக அரசியலுக்குள் கால் பாதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.


இதன் முதல் கட்ட நகர்வாக தனது மக்கள் இயக்கம் சார்பாக ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் விஜய். இதனையடுத்து இன்று 234 தொகுதிகளிலும் உள்ள தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க இருக்கின்றார்.


இந்நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் விஜய்யின் கட்சி சின்னம் தொடர்பான தங்களின் விருப்பம் குறித்து பேசியிருக்கின்றனர். அதாவது மெர்சல் படத்தில் நடிகர் விஜய் தன்னை கைது செய்து அழைத்து வரும் போது தனது இரண்டு கைகளையும் தலைக்கு மேல் வைத்து வணக்கம் செய்யும் காட்சியானது ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கின்றது.

எனவே அதே போன்ற சின்னத்தை தளபதி விஜய் தனது கட்சிக்கு அறிமுகப்படுத்தினால் ரொம்ப நன்றாக இருக்கும் என அவரது நிர்வாகத்தினர் சிலர் தங்கள் விருப்பத்தை வெளிப்படையாக கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement