• Jul 26 2025

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவை அடுத்து ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சர்ப்ரைஸ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிக் பாஸ் வருகிறது என்றால் அதற்காக ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்று  தான் கூற வேண்டும். 

அதனால் அதற்கு நேரம் ஒதுக்க சீரியல்களின் நேரத்தையும் மாற்றி அமைக்கும் விஜய் டிவி.அத்தோடு  சில நேரங்களில் சீரியலை அவசரமாக முடிப்பது அல்லது நிறுத்திவைப்பது போன்ற விஷயங்களும் நடக்கும்.



மேலும் அப்படி விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் ஆறாம் சீசன் முடிவுக்கு வந்துள்ளது. அத்தோடு நாளை முதல் சிறகடிக்க ஆசை மற்றும் மகாநதி ஆகிய இரண்டு சிரியல்களை விஜய் டிவி களமிறக்குகிறது.

சிறகடிக்க ஆசை தொடர் இரவு 9.30 மணிக்கும், மகாநதி தொடர் இரவு 10 மணிக்கும் வர உள்ளது.


அதே போல வார இறுதி நாட்களில் பிக் பாஸுக்கு மாற்றாக அடுத்த வாரம் முதல் குக் வித் கோமாளி 4ம் சீசன் வர இருக்கிறது. அத்தோடு 28 ஜனவரி முதல் சனி மற்றும் ஞாயிறு தோறும் இரவு 9 மணிக்கு குக் வித் கோமாளி ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது.


 

Advertisement

Advertisement