• Jul 25 2025

நடைபெற்றுக்கொண்டு இருக்கும் PS -2 இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு..? சிம்பு பக்கத்தில் இருந்த த்ரிஷாவை தூக்கிட்டாங்க!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது.

இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படம் 'பொன்னியின் செல்வன்'.இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.

அந்த வகையில் 'பொன்னியின் செல்வன் 2' படத்தின், ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடிக்க ஆரம்பமாகி உள்ளது.அதன் ஒரு பகுதியாக இன்று, இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா படு பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.இந்நிகழ்வில் நடிகர்களான கமல்ஹாசன், சிம்பு என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டிருக்கின்றனர்.

இதற்கு முதல் இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த கதிரைகளில் அவரவர் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.அந்த வகையில் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன், முன் வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த கதிரைகளில் த்ரிஷா அதற்கு பக்கத்தில் STR என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கு பின் STR பக்கத்தில் இருபுறமும் கார்த்தி மற்றும் விக்ரம்மிற்கு கதிரைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.த்ரிஷாவிற்கு ஜெயம் ரவி மற்றும் கார்த்திக்கு நடுவே கதிரை ஒதுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

என்னடா சிம்புவிற்கு பக்கத்தில் இருந்த த்ரிஷாவை தூக்கிட்டிங்க, தலைவன் சிம்பு என்றால் பயமாடா என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.




Advertisement

Advertisement