• Jul 25 2025

இருமுடி கட்டி முதன்முறையாக அந்த இடத்திற்குச் சென்ற சசிகுமார்... தீயாய் பரவும் புகைப்படம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் மற்றும் நடிகராகவும் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்ற ஒருவரே சசிகுமார். அந்தவகையில் இவர் இயக்குநர் பாலாவின் 'சேது', அமீரின் 'மெளனம் பேசியதே', 'ராம்' ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 


அதுமட்டுமல்லாது 2008-இல் வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கே பெருமை தேடித்தந்த 'சுப்பிரமணியபுரம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞராக அறிமுகமானார். இவரின் அறிமுகப் படமே ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இவ்வாறு புகழ்பெற்ற ஒருவராக விளங்கி வருகின்ற சசிகுமார் சபரிமலை செல்வதற்காக கடந்த சில நாட்களாக மாலை அணிந்து விரதம் இருந்தார். அதேநேரத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளில் நடந்த 'நந்தன்' படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தும் வந்தார். 


இந்த நிலையில் நேற்று மதுரையில் உள்ள அய்யப்பன் கோவிலில் சக ஐயப்ப பக்தர்களுடன் இணைந்து கூட்டத்தோடு கூட்டமாக இருமுடி கட்டிக் கொண்டார். பின்னர் அங்கிருந்து சபரிமலை புறப்பட்டு சென்றார். அவருடன் நந்தன் பட டைரக்டர் இரா. சரவணன் உள்ளிட்ட படக்குழுவினரும் இருமுடி கட்டி சபரிமலை சென்றனர். 

இந்த சமயத்தில் நந்தன் படத்தில் நடிப்பது குறித்து சசிகுமார் தெரிவித்த கருத்து ஒன்றை டைரக்டர் இரா. சரவணன் தனது டுவிட்டரில் தற்போது பகிர்ந்துள்ளார். அதில், ''ஏண்டா இந்த படத்தில் நடிக்க ஒத்துக்கிட்டோம்னு பல நாள் வருத்தப்பட்டேன்.

கேரக்டரை உள்வாங்கவே முடியலை. வேற காட்சியை எடுக்க சொல்லிட்டு வந்து விட்டேன்.எதையும் கடந்துபோற பக்குவம் கொண்ட அந்த கேரக்டராக மாறிய பின்னால் பேய் பிடிச்ச மாதிரி இருந்தது'' என்று சசிகுமார் கூறியுள்ளதாக இருமுடி கட்டிய புகைப்படத்துடன் குறிப்பிட்டிருக்கின்றார்.


Advertisement

Advertisement