• Jul 26 2025

திருமணம் முடிந்த இரண்டே மாதங்களில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பிரபல நடிகை- குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியாகிய முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை பூர்ணா.கேரளாவை சேர்ந்த இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் அதிக படங்கள் நடித்து இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் உடல் எடை அதிகரித்ததன் காரணமாக திரைப்பட வாய்ப்பின்றி தவித்தார். அத்தோடு கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.


 கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி துபாயை சேர்ந்த தொழிலதிபர் Shanid Asif Ali என்பவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து இருந்தது. ஆனால் அவர் கணவருடன் திருமண போட்டோக்கள் வெளியிட்டபின் தான் அவருக்கு திருமணம் நடந்து முடிந்தது எல்லோருக்கும் தெரியவந்தது.


இந்நிலையில் தற்போது திருமணமாகி இரண்டு மாதங்களில் பூர்ணா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருக்கிறார். அதை வீடியோவாக அவர் வெளியிட்டு இருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும் பூர்ணாவுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement