இன்னும் சில நாட்களில் திரைக்கு வரவிருக்கும் 'இறுகப்பற்று' திரைப்படம் எப்படி இருக்கு என்ற முழு திரைவிமர்சனத்தை பார்ப்போம். 





யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்னதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் "இறுகப்பற்று". காதலிக்கும் போது இருக்கும் அன்பு திருமணத்திற்கு பிறகு குறைந்து போவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக உருவாகி இருக்கும் படம் தான் இறுகப்பற்று.

"அதிலும் கணவன் மனைவிக்குள்ள சண்டை வருவதற்கு காரணம் தேவையில்லை, கணவன் மனைவியா இருக்கிறதே பெரிய காரணம் தான் " என்ற வசனம் இந்த படத்துல ஹைலையிட்டா இருக்கு. இப்படி எதிரும் புதிருமாக இருக்கும் கணவன், மனைவி பிரச்சனை குறித்து இப்படம் பேசுகிறது.

தம்பதிகளிடையே ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு சொல்பவராக இருக்கும் ஷ்ரத்தாவிடம் விதார்த்-அபர்னதி, ஸ்ரீ-சானியா ஜோடி கவுன்சிலிங் பெற வருகின்றனர். அதில் விதார்த் தன் மனைவி குண்டாக இருக்கிறார், வாய் துர்நாற்றம் இருக்கிறது போன்ற பிரச்சனைகளை சொல்லி விவாகரத்து கேட்கிறார்.

அதே போன்று ஸ்ரீ தன் மனைவி தன்னிடம் காதலோடு இருப்பதில்லை என்ற பிரச்சனையை சொல்கிறார். இதற்கெல்லாம் ஆலோசனை சொல்லும் ஷ்ரத்தா தன் கணவர் விக்ரம் பிரபு உடன் சண்டையே போடாமல் வாழ்கிறார். இதுவே அவர்களுக்குள் ஒரு பிரச்சனையாக வெடிக்கிறது.

இப்படி மூன்று தம்பதிகளும் சந்திக்கும் பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பதை எதார்த்தம் கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர். இந்த அருமையான திரைப்படம் எதிர் வாரும் ஒக்டோபர் 6-ஆம் திகதி திரைக்கு வரவிருக்கிறது.
Listen News!