• Jul 23 2025

லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியிடுவதில் ஏற்பட்ட புதிய சிக்கல்- இதுக்கும் ஆப்பு வைச்சிட்டாங்களே....

stella / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யின் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய லியோ சூட்டிங், ஆகஸ்ட் மாதமே முடிவுக்கு வந்துவிட்டது. 

இதனையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன், கிராபிக்ஸ் வேலைகளில் படக்குழு பிஸியாக இருந்தது. மேலும் கடந்த இரு வாரங்களாக லியோவில் இருந்து விஜய் போஸ்டர், செகண்ட் சிங்கிள் ஆகியவற்றை படக்குழு வெளியிட்டது.

கடந்த செப்டம்பர் 30ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கப் போகிறது என ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக இந்த இசைவெளியீட்டு விழா நிறுத்தப்பட்டது.


 லியோ ட்ரெய்லர் நாளை அக்டோபர் 5ம் தேதி  சன் டிவி யூடியூப் சேனலில் மட்டுமே வெளியாகும் என்றும் எந்தவொரு ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியோ ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியோ லியோ படக்குழு நடத்தி படத்தை புரமோஷன் செய்யப் போவது கிடையாது என்பது உறுதியாகி உள்ளது.

அதிகாலை 4 மணி காட்சி முதல் லியோ படத்துக்கு ஏகப்பட்ட விஷயங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், விஜய் படங்களின் முன்னோட்டங்கள் வரும் போது கோயம்பேடு அருகே உள்ள ரோகிணி தியேட்டருக்கு வெளியே 10 ஆயிரம் ரசிகர்கள் வரை கூடி அந்த ட்ரெய்லரை கண்டு களித்து கொண்டாட்டம் போடுவார்கள். 


ஆனால், தற்போது, போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை என ரோகிணி தியேட்டர் ஓனர் ரேவந்த் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால், மேலும், தொடர்ந்து ட்ரெய்லர் கொண்டாட்டத்திற்கு அனுமதி பெற முயற்சித்து வருவதாகவும் கூறியுள்ளார். 10 ஆயிரம் பேர் கூடினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் நிச்சயம் அனுமதி கிடைக்காது என்றே தெரிகிறது என்கின்றனர்.


விஜய் படத்தின் ஒவ்வொரு கொண்டாட்டங்களும் தொடர்ந்து ரத்தாகி வரும் நிலையில், லியோ படத்தின் ரிலீஸ் சமயத்தில் மேலும், எத்தனை சிக்கல்கள் வரும் என ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர். எல்லாத்துக்கும் கூடிய சீக்கிரமே பதில் அடி கொடுப்போம் என அடுத்த போஸ்டர்களை இந்நேரம் அடிக்க ஆரம்பித்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement