• Jul 25 2025

தன் படம் வெளியான தேதியில் தயாரிப்பாளர் மரணம் ...வேதனையில் தமிழ்த் திரையுலகம்..!

rip
Aishu / 2 years ago

Advertisement

Listen News!

புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் தான் தயாரித்த திரைப்படம் வெளியான அதே தேதியில் மரணம் அடைந்துள்ளார்.

1991-ஆம் ஆண்டில் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படம் புது நெல்லு புது நாத்து. அத்தோடு  இந்த திரைப்படத்தில் ராகுல், சுகன்யா, நெப்போலியன், பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.


அத்தோடு ஆர். செல்வராஜ் கதை எழுதிய இந்த படத்துக்கு பிரபல இயக்குநர் & நடிகர் பொன்வண்ணன் வசனம் எழுதினார்.


இப்படத்தை மூகாம்பிகா ஆர்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ்,  V.E.வடுகநாதன், C.N.ஜெய்குமார், M.இளவரசு ஆகிய தயாரிப்பாளர்கள் தயாரித்திருந்தனர். அத்தோடு இவர்களுள் C.N.ஜெய்குமார் தற்போது (2023, மார்ச் 15-ஆம் தேதி) மரணம் அடைந்துள்ளார்.


புது நெல்லு புது நாத்து திரைப்படம் 15 மார்ச் 1991 அன்று வெளியாகி இருந்த நிலையில், அதே நாளில் 15 மார்ச் 2023 அன்று இப்படத்தின் தயாரிப்பாளர் C.N.ஜெய்குமார் மரணம் அடைந்துள்ள விஷயம் திரைப்படத் துறையினரை கண்கலங்கி நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertisement

Advertisement