• Jul 25 2025

அந்த விஷயத்தில் விஜய் சேதுபதி ரொம்ப வீக்கா?.. உண்மையை உடைத்த பிரபல இயக்குநர்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஜய் சேதுபதியும் திகழ்ந்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களாக ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்து வருவதால் இவருடைய மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்துள்ளது அதன் காரணமாக தமிழைத் தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படம் நடித்து வருகிறார்.

தற்பொழுது கூட விஜய் சேதுபதி விடுதலை, மேரி கிறிஸ்மஸ், காந்தி டாக்கீஸ், மும்பைக்காரர், ஜவான் போன்ற படங்களில் நடித்து வருகிறார் இதில் முதலாவதாக விடுதலை திரைப்படம் வருகின்ற மார்ச் 31ம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இந்த படம் வெற்றிபெறும் பட்சத்தில் விஜய் சேதுபதி மார்க்கெட் விண்ணைத் தொடும் என பலரும் கூறி வருகின்றனர்.

ஏனென்றால் அந்த அளவிற்கு ஒரு பவர்ஃபுல்லான பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி திரையுலகில் தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி குறித்து 96 பட இயக்குநர் பிரேம்குமார் சில தகவல்களை பகிர்ந்து உள்ளார் அதில் அவர் சொன்னது விஜய் சேதுபதிக்கு “டிராவல் என்பதே சுத்தமாக பிடிக்காதாம்”..

மேலும் இந்த ஒரு விஷயத்திற்கு மிகவும் பயப்படுவார் என தெரிவித்துள்ளார். ஷூட்டிங் முடிந்து நடிகர் விஜய் சேதுபதியை வீட்டில் விட்டாலே போதுமாம் அதுதான் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும் என கூறி இருக்கிறார். 96 படத்தில் ஒரு பாடலுக்கு அந்தமானில் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம் அதை வைத்தே அந்த பாடலின் மீதி காட்சிகளை எடிட் பண்ணி விடலாமா என  விஜய் சேதுபதி இயக்குநரிடம் கூறி இருக்கிறார்.ஆனால் பிரேம்குமார் இல்ல சார் இதை முடித்துவிட்டு அடுத்து  கல்கத்தா அதுக்கு அப்புறம் ஜெய்ப்பூர், ஜோத்பூர், ஜெய்சால்மர், மணாலி இங்க எல்லாம் படப்பிடிப்பு முடிச்சிட்டு தான் சென்னைக்கு போறோம் என கூறினேன் இதைக் கேட்ட உடனேயே விஜய் சேதுபதிக்கு மூஞ்சி சோகமாகி அப்படியே வாடிவிட்டது  என தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement