• Jul 23 2025

திருதிருன்னு முழிச்சிட்டு இருக்காங்க... கமலிடம் சிக்கப் போவது யாரு... வெளியானது ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்களைக் கடந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸஸ்குகள் கொடுக்கப்பட்டு வருவதால் போட்டியாளர்களும் சலிப்படையாமல் விளையாடி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஏலியன்களாகவும், ஆதிவாசியாகவும் இரு அணிகளாக பிரிந்து விளையாடி அசத்தி இருந்தனர். 

இதில் ஏலியன் அணியினர் வீட்டின் உள்ளேயும், ஆதிவாசி அணியினர் கார்டன் ஏரியாவிலும் இருந்து விளையாடினர். இதில் விளையாட்டை விட சண்டைகளே அதிகமாக காணப்படுகின்றன.


இதனைத் தொடர்ந்து கமல் சாரின் எபிசோட்டுக்காக பல ரசிகர்களும் காத்திருக்கின்றனர். அந்தவகையில் இன்றைய நாளுக்குரிய முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.

அதில் கமல் "நல்லா விளையாட ஆரம்பிச்சாங்க என்றால் சத்தமும் அதிகமாகுது, வெற்றிக்கும் சத்ததுக்கும் எதோ தொடர்பு இருக்கு என்று உள்ளே நம்பிட்டு இருக்காங்க, அது இல்லேன்னு அவங்களுக்கு தெளிவு படுத்தணும்.

சிலபேர் விழிப்புடன் இருக்கின்றார்கள், சிலர் திரு திருன்னு முழிச்சிட்டு இருக்காங்க, அதையும் அவங்களுக்கு எடுத்துச் சொல்லணும்" எனக் கூறி இருக்கின்றார்.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..! 


Advertisement

Advertisement