• Jul 24 2025

'ரோஜா' சீரியலைத் தொடர்ந்து... முடிவுக்கு வரும் மற்றொரு ஹிட் தொடர்... சோகத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சீரியலுக்குப் பேர் போன சேனல்களில் ஒன்று சன் டிவி. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மட்டுமன்றி நிகழ்ச்சிகளும் மக்களை எளிதில் கவர்ந்து விடுகின்றன. அதிலும் குறிப்பாக இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டமே உண்டு. 

அந்தவகையில் சன் டிவியில் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொடர் தான் 'ரோஜா' சீரியல். சுமார் 4 வருடங்களாக 1000 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிய இந்த தொடர் ஆனது இப்போது முடிவுக்கு வந்துவிட்டது.


குறிப்பாக பல மாதங்களாக இந்த தொடர் தான் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் TRPயில் முதல் இடத்தை பிடித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ரோஜா தொடர் முடிவுக்கு வந்தமையினை அறிந்து சோகத்தில் இருக்கும் சன் டிவி ரசிகர்களுக்கு இப்போது இன்னொரு சோக செய்தி வந்துள்ளது.


அதாவது இன்னொரு ஹிட் சீரியலான 'அன்பே வா' தொடரும் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் எப்போது முடிவுக்கு வருகிறது என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

Advertisement

Advertisement