• Jul 24 2025

டிவோர்ஸ் நோட்டீஸ் கொடுத்த கண்ணம்மா... கெஞ்சி அழும் பாரதி... பரபரப்பான திருப்பங்களுடன் வெளிவந்த ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ஆனது தற்போது விறுவிறுப்பிற்கும் பரபரப்பிற்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. 

அந்தவகையில் தற்போது அதில் பாரதி கண்ணம்மாவிடம் சென்று இந்த ஊருக்கு ஹாஸ்பிடல் வரும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன் எனக் கூறி உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.


இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. அதில் ஊர்த் தலைவர்கள் பாரதி உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்குச் சென்று நாங்க உங்களுக்கு என்ன பண்ணித் தரணும் என்று கூறுங்க எனக் கேட்கின்றனர். 

அதற்கு உடனே பாரதி "இந்த ஊருக்கு ஒரு ஹாஸ்பிடல் வேண்டும்" எனக் கேட்கின்றார். இதைக்கேட்ட ஊர்த்தலைவர் "இந்த ஊருக்கு நீங்க ஆசைப்பட்ட மாதிரி ஒரு அரசாங்க மருத்துவமனை வரப்போகுது" எனக் கூறி பத்திரத்தை ஒப்படைக்கின்றார். பாரதியுடன் இணைந்து அனைத்து ஊர் மக்களும் ஆட்டம் பாட்டம் என்று இருக்கின்றனர்.


அந்த நேரத்தில் அந்த இடத்திற்கு வந்த கண்ணம்மா "எதுவாக இருந்தாலும் இனி கோர்ட்டில் பார்த்துக்கலாம்" எனக் கூறிப் பாத்திரம் ஒன்றை நீட்டுகின்றார். அதற்கும் டிவோர்ஸ் நோட்டீஸ் இருக்கின்றது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாரதி "டிவோர்ஸ் வேணாம்" எனக் கூறி கெஞ்சுகின்றார். ஆனால் கண்ணம்மாவோ விடாப்பிடியாக நிற்கின்றார். இவ்வாறாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.


Advertisement

Advertisement