• Jul 26 2025

பாரதி விஷயத்தில் சண்முகம் எடுத்த முடிவு... உண்மையான கண்ணம்மா மேல் சத்தியம் பண்ணிய சித்ரா... வெளியான ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'பாரதி கண்ணம்மா' சீரியலினுடைய வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் 'பாரதி கண்ணம்மா-2' சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. முதல் பாகத்திற்கு எந்தளவு வரவேற்பு கொடுத்தார்களோ, அதே அளவு வரவேற்பை இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் இந்த சீரியலினுடைய இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் சண்முகத்தையும் கண்ணம்மாவையும் வர சொல்லுமாறு சௌந்தர்யா கூறுகின்றார். அதனைக் கேட்டதும் "என்ன விஷயம் அம்மா" என்று பாரதி கேட்கின்றார்.


அதற்கு சௌந்தர்யா "சண்முகத்தின் பெரிய பொண்ணோட கல்யாணத்திற்காக சம்பளத்தில் அட்வான்ஸ் வேணும் என்று கேட்டிருந்தாரு, அதைக் கொடுக்கத்தான் வர சொன்னேன்" என்கிறார்.

பின்னர் அங்கு வந்த சண்முகத்திடம் கொடுக்குமாறு கூறி பாரதியிடம் பணத்தைக் கொடுக்கின்றார். அங்கிருந்து வெளியே சென்றதும் சண்முகம் கண்ணம்மாவிடம் "சௌந்தர்யாம்மா நம்ம கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு நமக்கு  பண்ணுறாங்க என்றால் அவங்களுக்கு நாம எவ்வளவு நன்றியோடு இருக்கணும், நீ பாரதிக்கிட்ட பழக வேணாம் என்று நான் சொல்லல, ஆனால் பாரதி கிட்ட நட்பைத் தாண்டி வேற எந்த எண்ணத்திலும் பழகக் கூடாது" என சொல்கின்றார்.


வீட்டிற்கு சென்ற கண்ணம்மா உண்மையான கண்ணம்மாவின் போட்டோவை பார்த்து "சத்தியமாக சொல்கிறேன் கண்ணம்மா, இந்தக் குடும்பம் தலை குனியிற மாதிரி எந்தக் காரியத்தையும் நான் செய்ய மாட்டேன்" என சத்தியம் செய்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement