• Jul 26 2025

கண்ணைப் பதம் பார்த்த கல்... சுய நினைவை இழந்த விஜய் டிவி சீரியல் நடிகர்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சாதாரண மனிதர்களையும் சாதனையாளர்கள் ஆக்கிய பெருமை விஜய் டிவியையே சாரும். அந்தளவிற்கு இதில் ரசிகர்களைக் கவரும் விதத்தில் ஏராளமான சீரியல்களும், ரியாலிட்டி ஷோக்களும் ஒளிபரப்பாகி வருகின்றன. 

அந்தவகையில் அது இது எது, கலக்கப் போவது யாரு மற்றும் விஜய் டிவி சீரியல்கள் எனப் பலவற்றிலும் நடித்துப் பிரபலமானவர் தான் நடிகர் சக்திவேல்.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற விபத்தில் அவரது ஒரு பக்க கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. அதாவது விருகம்பாக்கம் ஐநாக்ஸ் தியேட்டர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையில் கிடந்த கற்கள் லாரி டயரில் சிக்கி பின்னாடி சென்று கொண்டிருந்த சக்திவேலின் கண்ணில் பட்டு அங்கேயே அவர் பரிதாபமாக மயங்கி விழுந்து விட்டார்.

இதனையடுத்து சில நிமிடங்கள் சுய நினைவையே இழந்து மயங்கி ரோட்டில் விழுந்து கிடந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது அவரது ஒரு கண்ணில் கட்டுப் போடப்பட்டுள்ளது.


இந்நிலையில் தற்போது சக்திவேல் வெளியிட்டுள்ள வீடியோவில் "ஹெல்மட் போடலைன்னா 1000 ரூபாய் ஃபைன் போடுறாங்க. ஆனால், நான் அந்த சமயத்தில் ஹெல்மட் போட்டிருந்தேன். ஒருவேளை ஹெல்மட் போடாமல் இருந்தால் அந்த கல் பட்டு மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போயிருப்பேன்" என்றார்.

மேலும் "ஹெல்மட் இல்லைன்னா ஃபைன் போடுறாங்க, அதேபோல் சாலை விதியை தாண்டினால் ஃபைன் போடுறாங்க, ஆனால், நல்ல சாலையை மட்டும் போடுவதில்லை, சொல்வது போல் சாலையை ஒழுங்காக பராமரிப்பதில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா தயவு செய்து இதெல்லாம் கொஞ்சம் சரி பண்ணுங்க" எனவும் கூறி உள்ளார்.

அதுமட்டுமல்லாது விருகம்பாக்கத்தில் அதிகமாக கற்கள் சாலையோரங்களில் சிதறிக் கிடக்கின்றன. அதை சரி செய்யுங்க எனவும் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார் சக்திவேல். இவரின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement