• Jul 25 2025

ரச்சிதாவைத் தாறுமாறாகக் கேள்வி கேட்ட அசீம்.. பதில் சொல்ல முடியாமல் திணற வைச்சிட்டாரே.. வெளியானது ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல சேனல்களில் ஒன்றாகிய விஜய் டிவியில் 85 நாட்களைக் கடந்து பிக்பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் மணிகண்டன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அந்தவகையில் அமுதவாணன், விக்ரமன், அசீம், ஏடிகே, ரச்சிதா, மைனா நந்தினி, சிவின், கதிர் என எட்டு  போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதில் இந்த வாரம் யார் வெளியேறுவார் எனப் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் டிக்கெட்டு பினாலே டாஸ்க்கில் ஒன்றான விவாதம் இடம்பெறுகின்றது. அதாவது நேருக்கு நேராக 2பேருக்கு இடையில் அந்த டாஸ்க் இடம்பெறுகின்றது. 

அந்தவகையில் இந்த ப்ரோமோவில் அசீமிற்கும், ரச்சிதாவிற்கும் இடையில் பயங்கரமான விவாதம் இடம்பெறுகின்றது. அதில் அசீம் "நீங்க வந்து இந்த 86 நாளும் என்ன பண்ணி இருக்கீங்க" எனக் கேட்கின்றார். அதற்கு ரச்சிதா எந்த டாஸ்க்கிலும் நீங்க அதிகமாக பங்கு பற்றியதாகத் தெரியவில்லை. நீங்க நிறைவாகத் தெரியிற அளவிற்கு என்ன பண்ணி இருக்கீங்க" எனக் கேட்கின்றார்.

அதற்கு ரச்சிதா "ரீல் முகம், ரியல் முகம் எல்லாமே நான் வெளிய நடிச்சாச்சு அசீம், இங்க வந்து நான் நடிக்க வேண்டிய அவசியமும் இல்லை" எனக் கூறுகின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ வெளிவந்து இருக்கிறது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement