• Jul 24 2025

போடுடா வெடிய- துணிவு படத்தின் ரிலீஸ் திகதி அறிவிச்சாச்சு- துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படத்தைத் தொடர்ந்து அஜித் மூன்றாவது முறையாக எச்.வினோத்துடன் கூட்டணி அமைத்து நடித்து வரும் திரைப்படம் தான் துணிவு. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை மஞ்சுவாரியார் நடித்த வருகின்றார்.

வலிமை படத்தை போல பாடல்கள், குடும்ப சென்டிமென்ட் காட்சி, காமெடி என அனைத்து அம்சங்களும் துணிவு படத்தில் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும் இப்படம் வங்கிக் கொள்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்றும் தகவல் வெளியாகியிருந்தது.


இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான "சில்லா சில்லா" டிசம்பர் 9ம் தேதி பவெளியாகவுள்ளதோடு விஜய்யின் வாரிசு திரைப்படத்துடன் இப்படம் வெளியாகவுள்ளது என்றும் அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.இதனால் இருவரின் ரசிகர்களும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

 துணிவு படம் வரும் ஜனவரி 12ம் தேதி இங்கிலாந்தில் வெளியாகப் போவதாக அதன் விநியோகஸ்தர்கள் அதிரடியாக அறிவித்துள்ள நிலையில், உலகம் முழுவதும் துணிவு படம் ஜனவரி 12ம் தேதி தான் வெளியாகும் என அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். 


No Guts No Glory-ன்னு சும்மா சொல்லல.. துணிவு அதிக வசூல் செய்யுதா அல்லது வாரிசு செய்யுதான்னு பார்த்து விடலாம் என அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement