• Jul 24 2025

“வேகமா வடிவேலுவை மிதிச்சுட்டேன்".. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்..உண்மையை உடைத்த நடிகை.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அதிக காமெடி நடிகைகள் இல்லை.ஒரு சில நடிகைகளே தமது திறமைகளை கொண்டு முன்னுக்கு உள்ளார்கள். அந்த வகையில் மிக முக்கியம் ஆனவர்களில் ஒருவர் நடிகை சுமதி.

மேலும் இவர் தோன்றும் திரைப்படங்களில் மிகவும் ஆக்ரோஷமாக அதே வேளையில் காமெடி கலந்து இருக்கும் ரோல்களில் நிறைய நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக, நடிகர் வடிவேலுவுடன் சுமதி இணைந்து நடித்துள்ள காமெடி காட்சிகள், இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்த கூடியவை. ஐயா, கருப்பசாமி குத்தகைத்தாரர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வடிவேலுவுடன் சுமதி நடித்த காமெடி காட்சிகள் நினைக்கும் போதே சிரிப்பை வர வைக்கக் கூடியவை.

இவ்வாறுஇருக்கையில்  பிரத்யேக பேட்டி ஒன்றையும் நடிகை சுமதி தற்போது அளித்துள்ளார். சினிமா மூலம் பலரையும் சுமதி சிரிக்க வைத்தாலும் அவரது குடும்ப பின்னணி அதிக வேதனைகள் நிறைந்து இருந்தது என அவர் கூறியதன் மூலமே தெரியவந்துள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் பட்ட பல்வேறு கஷ்டங்கள் குறித்தும் உணவில்லாமல், உடையில்லாமலும் சிறுவயதில் பட்ட கஷ்டம் பற்றியும் பல உருக்கமான விஷயங்களை பேசி இருந்தார் நடிகை சுமதி.


இவ்வாறுஇருக்கையில்  திரைப்படத்தில் தான் பேசிய வசனங்கள் பற்றி பகிர்ந்து கொண்ட நடிகை சுமதி, ஒரு சில வசனங்களை பேசிய பின்னர் கண்ணும் கண்ணும் திரைப்படத்தில், வடிவேலு தன் உடலில் ஆவி வந்ததாக கூறி நடிக்கும் காட்சியில் தான் பேசிய வசனம் குறித்தும் பேசியிருந்தார்.

அந்த படத்தில் வரும் காமெடி காட்சியில், சுமதியின் கணவர் ஆவியாக தன்னுடைய உடம்பில் ஏறி கொண்டதாக கூறி ஊர் மக்களை வடிவேலு ஏமாற்றிக் கொண்டிருப்பார்.மேலும்  அந்த சமயத்தில் குழந்தைகளுடன் அங்கே சுமதி வருவார். அப்போது நடந்த விஷயத்தை பேசிய நடிகை சுமதி, "வந்தவன் வீட்டுக்கு வராம இங்க உக்காந்து உனக்கு என்னடா வேலை. எனக்கு வாங்கி வைத்திருந்த ஒரு வீட்டை அந்த கறி கடைக்காரன் பொண்டாட்டிக்கு எழுதி வச்சுட்டு, என் நகை, நட்டு எல்லாம் அவளுக்கு கொடுத்துட்டு செத்து போயிட்டே. இப்ப நானும், நம்ம பிள்ளைகளும் என்னடா பண்றதுன்னு சொல்லி வடிவேலுவை அடிப்பேன்.


அதெல்லாம் வந்து நேச்சுரலா பண்ண சீன் தான். முதல்ல வந்து வடிவேலு சாரை அடிக்குறதுக்கு லைட்டா தொட மட்டும் தான் செஞ்சேன், வேகமா மிதிக்கல. அப்போ அவர் வந்து சொன்னாரு 'இப்படி எல்லாம் பண்ண கூடாது நேச்சுரலா உதைக்கணும் இல்லன்னா ஆளை மாத்திடுவேன்' -ன்னு சொன்னாரு.


ஸாரி சார்ன்னு நான் சொல்லிவிட்டு அப்புறம் வந்த உடனே வேகமா உதைப்பேன். உண்மையிலேயே வேகமாக உதைச்சேன். அவரு எதுவுமே சொல்லலை. அவருக்கு வந்து நேச்சுரலா சீன் பண்ணனும். அதனால தான் அவரு கூட அத்தனை படம் பண்ணேன். இதுக்கு அப்புறம் கூப்பிடுவாருன்னு இன்னும் நான் எதிர்பார்த்துட்டு தான் இருக்கேன்" என கூறினார்.


Advertisement

Advertisement